பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய தெலுங்கு படம் ஜேஜிஎம், ஜன கன மன என்பதன் சுருக்கம்தான் இப்படம் இதில் விஜய்தேவரகொண்டா ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கயுள்ளார்.
பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறதுஇந்த படம் .
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்ட அட்டவணையுடன் சிறப்பாக தொடங்கியுள்ளது . இதில் நடிகை பூஜா ஹெக்டே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல வெளிநாடுகளில் நடக்கிறது.
விக்ரம் படத்தின் 3 நாள் வசூல் தெரியுமா? கொண்டாடும் ரசிகர்கள்!
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் முதலில் மகேஷ்பாபு நடிப்பதாக இருந்தது. ஆனால், அவருக்குப் பதிலாக விஜய் தேவரகொன்டா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.