வேற லெவல்!! கோலாகலமாக வெளியானது ’பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர்!

மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வரும் படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய் மற்றும் திரிஷா போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது நடைப்பெற்றுக்கொண்டு வருகிறது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழில் வெளியிடுவதற்கான உரிமையை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி உள்ளது.

இதனிடையே இப்படத்தின் ட்ரைலர் அல்லது டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment