இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி சிவகுமார், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர்.
படத்தில் முக்கிய நாயகனாகன சோழ இளவரசனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். அருள்மொழி வர்மனாக வரும் இவருக்கு சகோதரனாக ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம் நடித்துள்ளார். சோழனின் தோழன் வந்திய தேவனாக வருகிறார் கார்த்தி. பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்க ஐஸ்வர்யா ராய் பச்சன் இரட்டை வேடத்தில் இந்த படத்தில் நடித்த வருகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர். பொன்னியின் செல்வன்-1′ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் படத்தில் விக்ரம் பட ஏஜெண்ட் டினா வா? வேற லெவல் அப்டேட் !
சிறப்பு விருந்தினர்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்கின்றனர். இந்திய நட்சத்திரங்களான அனில் கபூர், பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கு குரல் கொடுத்துள்ளனர். கவிஞர் ஜெயந்த் கைகினி கன்னடப் பதிப்பில் இதையே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.