தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மிகப் பெரிய ஆசை எது என்றால் பலரும் கூறுவது எப்படியாவது மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பது தான். இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவிலும் ஏராளமான நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர். அதன்படி விக்ரம், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் ஐஸ்வர்யாராய் ,திரிஷா,நயன்தாரா ,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகையும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டீசரை, தஞ்சாவூரில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தது,ஆனால் தற்போழுது நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்தலாம் என திட்டமிட்டி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் பின்னணி இசைப் பணிகளில் ட்ரம்ஸ் சிவமணி பங்கேற்றுள்ளார்.இந்த வீடியோ பரவலாக வைரலாகி வந்தது. மேலும் அந்த வீடியோவில் கார்த்தி கதாபாத்திரத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதை ரசிகர்கள் ‘பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தியின் லுக் இதுதான்’ என கமெண்ட் செய்து இந்த வீடியோவை சமுக வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர்.
அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது, அது தொடர்வதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகிறான் சோழன் என்ற பதிவும் இருந்தது.
வாரிசு தயாரிப்பாளருக்கு பிறந்த ஆண் குழந்தை! வாரிசுடன் இருக்கும் வைரல் புகைப்படம்..
அதனை தொடர்ந்து அதன் அடுத்த பாகமான PS-2 அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.