பொன்னியின் செல்வன் – திரையில் சரித்திரம் படைக்குமா? வெளியான டிவிட்டர் விமர்சனம்!

பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் இன்று வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும், மேலும் இந்த வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகும்.

கல்வியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது. படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், லால், ஆர் பார்த்திபன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ponniyin selvan-11

படத்தின் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இசை பிரியர்களின் பிளேலிஸ்ட்களில் இடம் பிடித்துள்ளது.

அதற்குள் தமிழகத்தில் 2 வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் அனைத்தும் முடிந்துவிட்டதாம். தமிழகத்தில் மட்டுமே 750 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகிறதாம்.திரைப்படத்தில் அருண்மொழிவர்மனாக நடித்துள்ள நடிகர் ஜெயம் ரவி சென்னை வெற்றி திரையரங்கில் திரைப்படம் பார்க்க சென்றார்.

cropped-ponniyin-selvan-posters-1200-tile-1660043703.jpg

பொன்னியின் செல்வன் படத்தின் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இப்படத்தில் கார்த்தி மற்றும் சியான் விக்ரமின் நடிப்பு, ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, கதை, காட்சியமைப்பு, பிரம்மாண்ட தயாரிப்பு ஆகியவை பாசிட்டிவ் என்றும் சில இடங்களில் தொய்வு ஏற்படுவது நெகட்டிவ் என பதிவிட்டுள்ளார்.

அதுக்குள்ளே டிக்கெட் காலியா? புக்கிங்கில் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்!

Catch the latest brand new promo teaser of Mani Ratnam s Ponniyin Selvan Trisha Karthi 1664203298

1955ஆம் ஆண்டு புத்தகமாக வெளியான இந்த நாவல் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்தின் கடும் முயற்சியாழ் படமாக வெளியானது பலரும் பாராட்டி வருகின்றனர். டிவிட்டர் விமர்சனங்கள் இதோ ..

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment