தற்போது வளர்ந்து வரும் சினிமா நடிகர்களுக்கு மிகப் பெரிய ஆசை எது என்றால் பலரும் கூறுவது எப்படியாவது மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பது தான். அந்த அளவிற்கு மணிரத்தினம் இயக்குனர் மிகவும் புகழ் பெற்றவராக சினிமாத்துறையில் சுற்றி வருகிறார்.
அவர் இயக்கத்தில் வெளியாக உள்ள ஒவ்வொரு படங்களும் காவியங்கள் ஆகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அவர் காவியத்தை போன்று ஒரு படத்தினை இயக்கி கொண்டு வருகிறார். அந்த படம்தான் பொன்னியின் செல்வன்.
இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமா அளவிலும் ஏராளமான நடிகர், நடிகைகள் இணைந்துள்ளனர். அதன்படி விக்ரம், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்களும் ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட நடிகையும் இப்படி பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இது ஒரு காவியத்தை மையமாக இயக்கும் படம் என்பது போஸ்டரையும், டைட்டிலையும் பார்க்கும் போதே தெரிகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது படக்குழுவினர் அதற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.