’பொன்னியின் செல்வன் 2’ செம பாசிட்டிவ் விமர்சனங்கள்.. ட்விட்டர் பயனாளிகள் சொல்வது என்ன?

மணிரத்னம் இயக்கத்தில் இசை புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இன்று தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஆனால் நேற்றே அமெரிக்காவில் பிரிமியர் காட்சி வெளியானது என்பதும் இந்த படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ps2 c  ஏற்கனவே முதல் பாகம் எதிர்பார்ப்பை விட அதிக திருப்தியை தந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பதும் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் வகையில் உள்ளது என்றும் இந்த படத்தைப் பார்த்த ட்விட்டர் பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.

ps2 b

குறிப்பாக ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்த விக்ரம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துவிட்டார் என்றும் இந்த கேரக்டரில் அவரை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்றும் அந்த அளவுக்கு மிகச் சிறப்பான நடிப்பு என்றும் கூறி வருகின்றனர்.

அதேபோல் விக்ரம் பிரபு இரண்டாம் பாகத்தில் மிகச் சிறப்பாக நடத்தி உள்ளார் என்றும் நந்தினி கேரக்டரில் அடுத்த ஐஸ்வர்யா ராய் மனதை கொள்ளை அடித்து விட்டார் என்றும் ட்விட்டர் பயனாளிகள் கூறுகின்றனர். அருள்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக நடித்த கார்த்தி, குந்தவை தேவியாக நடித்த திரிஷா ஆகியோர் நடிப்பில் தங்கள் முழு பலத்தையும் காட்டியுள்ளனர் என்றும் இவர்கள் வரும் ஒவ்வொரு காட்சியும் மாஸாக உள்ளது என்றும் ட்விட்டர் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

ps2 a

மேலும் பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்றும் முதல் பதினைந்து நிமிடங்கள் மிகவும் சூப்பர் என்பதால் தயவு செய்து யாரும் தாமதமாக தியேட்டருக்கு செல்ல வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர் இந்த படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு இசை தான் என்றும் ஏஆர் ரகுமான் இசையில் தனது முழு திறமையும் காண்பித்துள்ளார் என்றும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் என்றும் சூப்பர் பயனாளிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கலை இயக்கம், கேமரா, எடிட்டிங் ஆகிய அனைத்துமே மிகப்பெரிய பிளஸ் என்றும் இந்த படத்தை யாருமே மிஸ் செய்யக்கூடாது என்றும் அவ்வளவு அருமையான படம் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் விக்ரம் சந்திக்கும் காட்சி சூப்பராக இருக்கிறது என்று இந்த காட்சிக்கு ஈடு இணையாக இதுவரை தமிழ் படத்தில் வந்ததில்லை என்றும் ட்விட்டர் பயனாளி தெரிவித்துள்ளார். மொத்தத்தில் முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் சூப்பராக உள்ளது என்பதே படம் பார்த்த டுவிட்டர் பயனாளிகளின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...