Connect with us

பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீடு!! தமிழக முதல்வர் பங்கேற்பு!!

Untitled design 2022 08 16T193252.415 16606589073x2 1

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீடு!! தமிழக முதல்வர் பங்கேற்பு!!

பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்று நாவலைத் தழுவி படமாக எடுக்க வேண்டும் என இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவான இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ரஹ்மான், சரத்குமார், கிஷோர், அஷ்வின் காக்கமானு, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கோலிவுட்டில் பெரிய லீக்கிற்குள் நுழைவதற்கு பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக பொன்னியின் செல்வன் படமானது கருதப்படுகிறது. அந்த வகையில் செப்டம்பர் 6-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியுடன் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா நடைப்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு தமிழக முதல்வர் பொன்னியின் செல்வன் ட்ரெய்லரை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு பாடல் வெளியீட்டு விழா பல முக்கிய பிரலங்களின் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top