பொன்னியின் செல்வன் புதிய போஸ்டர்: பிரகாஷ் ராஜ், ஜெயசித்ரா,ரஹ்மான் – ஃபர்ஸ்ட் லுக்!

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

1500x900 855290 ishwarya lakshmi 11

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர். மேலும் பொன்னியின் செல்வன்-1′ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை செப்டம்பர் 6-ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

இதனால் பல அப்டேட்டுகளை ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள பூங்குழலி கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதை தொடர்ந்து பிரகாஷ் ராஜ், ஜெயசித்ரா மற்றும் ரஹ்மான் ஆகியோரின் தோற்றத்தை பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

விஜய்க்கு ஜால்ரா தட்டும் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு ! காரணம் தெரியுமா ?

 

collage maker 04 sep 2022 07 1662299646

ட்விட்டரில், லைகா புரொடக்ஷன்ஸின் அதிகாரப்பூர்வ பக்கம் மோஷன் போஸ்டரைப் பகிர்ந்து கொண்டது மற்றும் பிரகாஷ்ராஜை சுந்தர சோழராகவும், ஜெயசித்ராவை செம்பியன் மாதேவியாகவும், ரஹ்மானை மதுராந்தகனாகவும் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய போஸ்டர் வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment