Connect with us

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர்! அட்டகாசமான லுக் !

ponniyin selvan posters 1200 tile 1660043703

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர்! அட்டகாசமான லுக் !

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி சிவகுமார், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர்.

ponniyin selvan movie new poster mani ratnam chiyaan vikram 1663246890

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர். பொன்னியின் செல்வன்-1′ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

சமீபத்தில் படத்தின் இறுதிகட்ட பணிகள் வேறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது , இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புரொமோஷனுக்காக விக்ரம் மற்றும் த்ரிஷா படத்தில் அவர்கள் நடித்த கேரக்டர் பெயர்களை ட்விட்டரில் மாற்றியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தை குறித்து அவ்வப்பொழுது மாஸான தகவல் வெளியாகித்தான் வருகிறது, அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

download 91

இந்தியா முழுக்க அஜித்தின் பைக் பயணம்… ரூட் மேப் குறித்து அப்டேட் !

அந்த போஸ்ட்டரில் ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மன் (எ) பொன்னியின் செல்வன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தர சோழர், ஆழ்வார்க்கடியான் நம்பி, பெரிய பழுவேட்டரையர், சிறிய பழுவேட்டரையர், பூங்குழலி, மதுராந்தகன், பார்த்திபேந்திர பல்லவன், கொடும்பாளூர் வேளாளர் பூதி விக்ரம கேசரி, வானதி, ரவிதாஸன் ஆகிய நடித்த அனைத்து கதாபாத்திரங்கள் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top