Connect with us

பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம் ! அதுவும் இத்தனை கோடியா?

ponniyin selvan posters 1200 tile 1660043703

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம் ! அதுவும் இத்தனை கோடியா?

முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி சிவகுமார், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர்.

ponn

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர். பொன்னியின் செல்வன்-1′ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் வேறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ,தற்போழுது ஐஸ்வர்யா ராய் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் பணி நடைபெற்று வருவதாக சமீபத்திய தகவல் வெளியானது.

சூர்யாவின் 42வது மோஷன் போஸ்டர்..! யூடியூப்பில் தெறிக்க விட்ட ரசிகர்கள் !

Ponniyin selvan 1

மேலும் தற்போது பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பிரமாண்ட தொகைக்கு வாங்கியுள்ளது. ஐந்து மொழிகளில், இரண்டு பாகங்களும் சேர்ந்து மொத்தமாக 125 கோடிக்கு ஓடிடி உரிமை விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top