வாயை பிளக்கும் வசூல் – கல்லா கட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம்!

பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் வெளியாகி 4 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும்.தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகியுள்ளது.

கல்கியின் சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ளது.மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது.

Catch the latest brand new promo teaser of Mani Ratnam s Ponniyin Selvan Trisha Karthi 1664203298

படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், லால், ஆர் பார்த்திபன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இசை பிரியர்களின் பிளேலிஸ்ட்களில் இடம் பிடித்துள்ளது.

பாவாடை தாவணியில் தங்க சிலையாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்..!!

படம் வெளியாகும் முன்பே தமிழகத்தில் 2 வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் அனைத்தும் முடிந்துவிட்டதாம். தமிழகத்தில் மட்டுமே 750 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.

சிக்கலில் மணிரத்தினம்.. வந்தித்தேவனை தவறாக சித்தரித்தாக புகார்..!!!

இந்நிலையில் இப்படம் முதல் நாளில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதை தொடர்ந்து இப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment