பொன்னியின் செல்வன் 2 எப்போ ரிலீஸ் தெரியுமா ? தெறிக்க விடும் அப்டேட்!

பொன்னியின் செல்வன் பாகம் 1 பல மொழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான 5 நாட்களிலே 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

சோழர்களின் ஆட்சியைக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து படத்தை தயாரித்தன.

மொத்தமாக 5 பாகம் கொண்ட புத்தகத்தை 2 பாகம் 3 மணி நேர பாடமாக தந்து உள்ளோம் என அறிவித்திருந்தனர்.இயக்குனர் மணிரத்னம் அவர்களே, படத்தின் முதல் பாகம் வெளியாகி ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என முன்னதாக கூறினார்.

ponniyin selvan 4

இந்நிலையில் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது ரசிகர்களை மகிழ்விக்கும் செய்தியாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் பொண்ண காதலிச்சு பிரின்ஸாக நினைக்கும் சிவகார்த்திகேயன்! பிரின்ஸ் மாஸ் ட்ரைலர் !

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment