வேகமாக தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பு! லீக்கான போட்டோஸ்!

பொன்னியின் செல்வன் பாகம் 1 பல மொழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியான 5 நாட்களிலே 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

சோழர்களின் ஆட்சியைக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து படத்தை தயாரித்தன.

22 633bb1c5cfd0a

விஜய்யின் வாரிசு படத்தில் இப்படி ஒரு பாட்டா? சூட்டிங் எங்க தெரியுமா?

மொத்தமாக 5 பாகம் கொண்ட புத்தகத்தை 2 பாகம் 3 மணி நேர பாடமாக தந்து உள்ளோம் என அறிவித்திருந்தனர்.இயக்குனர் மணிரத்னம் அவர்களே, படத்தின் முதல் பாகம் வெளியாகி ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கூறினார்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் பார்ட் 2வின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது, இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்று பூங்குழலி. இந்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தால் மிரண்டு போய் பின்வாங்கிய படங்களின் லிஸ்ட்!

பூங்குழலியின் படப்பிடிப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் லீக்காகியுள்ளது. ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment