பொன்னியின் செல்வன் படத்தின் ரன்-டைம் , சென்சார் குறித்து வெளியான மாசான தகவல்!

பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும், கல்கி எழுதிய நாவலை தொடர்ந்து இந்தப்படம் உருவாகியுள்ளது, மொத்தமாக 5 பாகங்களை கொண்ட புத்தகத்தை 2 பாகமாக உருவாக்கியுள்ளனர்.தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகும்.

பொன்னியின் செல்வன் பாகம் 1 பல மொழிகளில் இந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போழுது படத்தின் ponn 11களை படக்குழு தொடங்கியுள்ளது.

 

சோழர்களின் ஆட்சியைக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படத்தில் இந்தக் காலகட்டத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து படத்தை தயாரித்தன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

சமீபத்தில் இந்த படத்தின் தேவராளன் ஆட்டம் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது. படத்தை குறித்த அப்டேட் தொடந்து வந்து ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது.

தனுஷ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நானே வருவேன் படக்குழு!

ponniyin selvan-17

இந்நிலையில் பொன்னியின் செல்வன் அதிகாரபூர்வ சென்சார் சான்றிதழ் வெளியாகி இருக்கிறது. படம் மொத்தமாக 2 மணி 46 நிமிடங்கள் ஒடவுள்ளது. மேலும் படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment