இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் முன்னிலையில் உள்ளது பொன்னியின் செல்வன் படம். இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சில தினங்களின் முன் வெளியானது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே பட குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளமே பணியாற்றியுள்ளனர். கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாக்கியது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த படத்தின் அப்டேட்க்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்சன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்று முன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இசைப்புயல் இணைந்து பின்னணி இசை அமைத்துக் கொண்டிருக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற தற்போழுது வீடியோ சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கும் கத்ரீனா கைஃப்! வைரல் புகைப்படம்!
https://twitter.com/MadrasTalkies_/status/1551530242577412098?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1551530242577412098%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Fcinema-ponniyin-selvan-first-single-will-release-soon-super-update-from-production-team-776831.html