பொன்னியின் செல்வன் – 3வது பாகம் எடுக்க தயார் – மணிரத்தினம் கொடுத்த மாஸ் அப்டேட் !

தென்னிந்திய முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிகி உள்ளது .இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.படம் வெளியான 5 நாட்களிலே 250 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து வருகிறது.

cropped-ponniyin-selvan-posters-1200-tile-1660043703.jpg

சோழர்களின் ஆட்சியைக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து படத்தை தயாரித்தன.

சோழர்களை தேடும் பழுவேட்டரையரின் நிஜ வாரிசுகள்! வெளியான ஷாக்கிங் வீடியோ அப்டேட்!

மொத்தமாக 5 பாகம் கொண்ட புத்தகத்தை 2 பாகம் 3 மணி நேர பாடமாக தந்து உள்ளோம் என அறிவித்திருந்தனர்.இயக்குனர் மணிரத்னம் அவர்களே, படத்தின் முதல் பாகம் வெளியாகி ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்று கூறினார்.

விக்ரம் பட ஏஜெண்ட் டீனா அடுத்து விஜய் படத்துலயா? லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

சமீபத்தில் படம் வெளியாகும் முன்பு படக்குழு சிறப்பாக பல இடங்களுக்கு புரொமோஷனுக்கு சென்றுள்ளனர். மேலும் பல செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர். அதில் ஒரு பேட்டியில் பொன்னியின் செல்வன் – 3வது பாகம் எடுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் மணி ரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களின் மனத்தில் மகிழ்ச்சி அதிர்வலைகளை உருவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment