பொன்னியின் செல்வன்- ‘பொன்னி நதி’ பாடல் மேக்கிங் வீடியோ!

முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ள வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் பெரும் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் டீசர் சில வாரங்களின் முன் மிக பிரம்மாண்டமாக வெளியானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாகிறது.

ponni nathi

இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் அப்டேட்க்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் சிங்கிள் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பொன்னி நதி’ பாடல் வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பாடலின் புதிய போஸ்டரை வெளியிட்டன. இசைப்புயல் பாடியிருக்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.

ponnin seivan 1

இந்த பாடல் படத்தில் ஆடிப் பெருக்கில் வீரநாராயண ஏரிக்கு அருகே வல்லவராயன் வந்தியத்தேவன் குதிரையுடன் பயணிக்கும் போது ‘பொன்னி நதி’ பாடல் கதையின் தொடக்கப் புள்ளியாக இருக்கும்.பொன்னியின் நதி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து தற்போது இந்த பாடல் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

மீண்டும் வெளியாகிய விஜய்யின் வாரிசு படத்தின் புகைப்படம் ! டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

இந்த வீடியோ தற்போழுது சமூக வலை தளங்கலீல் வைரலாகி வருகிறது.

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment