
பொழுதுபோக்கு
‘பொன்னியின் செல்வன்’ – பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா குறித்த மாஸ் அப்டேட்!
முன்னணி இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சில தினங்களின் முன் மிக பிரம்மாண்டமாக வெளியானது.இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் முன்னிலையில் உள்ளது பொன்னியின் செல்வன் படம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாகிறது.
இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் அப்டேட்க்காக அனைவரும் காத்திருக்கும் நிலையில் தற்போழுது பர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பொன்னி நதி’ பாடல் ஜூலை 31ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளனர்.
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து பாடலின் புதிய போஸ்டரை வெளியிட்டன. இசைப்புயல் பாடியிருக்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். மாலை 6 மணிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் ஒரு பிரமாண்டமான சிங்கிள் வெளியீட்டு நிகழ்வை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த விழாவில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி கலந்து கொள்கின்றனர்.
மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் வென்ற பதக்கங்கள் எத்தனை தெரியுமா?
இந்த பாடல் படத்தில் ஆடிப் பெருக்கில் வீரநாராயண ஏரிக்கு அருகே வல்லவராயன் வந்தியத்தேவன் குதிரையுடன் பயணிக்கும் போது ‘பொன்னி நதி’ பாடல் கதையின் தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
