Connect with us

பொன்னியின் செல்வன்’ படக்குழுவின் முதல் பயணம் ரத்து? – ஷாக்கிங் அப்டேட் இதோ !

ponniyin selvan audio launch date

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன்’ படக்குழுவின் முதல் பயணம் ரத்து? – ஷாக்கிங் அப்டேட் இதோ !

பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்றும், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகும்.

பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது. படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், லால், ஆர் பார்த்திபன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ponniyin selvan movie new poster mani ratnam chiyaan vikram 1663246890

பொன்னி நதி’, ‘சோழ சோழன்’, ‘ராட்சச மாமனே’ ஆகிய படங்களின் பாடல் வரிகள் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், ‘அலைக்கடல்’, ‘தேவராலன் ஆட்டம்’ ஆகிய படங்களின் வீடியோக்கள் இன்னும் வெளியாகவில்லை. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இசை பிரியர்களின் பிளேலிஸ்ட்களில் இடம் பிடித்துள்ளது.

நேற்று ராட்சஸ மாமனே பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படம் வெளியாக இன்னும் 10 நாட்களே இருப்பதால் படக்குழுவினர் பட புரொமோஷனை துவங்கியுள்ளனர். படம் தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் கதை என்பதால், முதல்கட்டமாக தஞ்சையில் விளம்பரத்தை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

mani ratnam in ponniyin selvan movie raatchasa maamaney song bts video 1663575342

மீண்டும் ஓடிடி ஹீரோவாக மாறும் சூர்யா! சர்ச்சையில் வெளியாகும் வணங்கான் அப்டேட் !

அடுத்ததாக கேரளா, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக ஆடியோ மற்றும் இசை வெளியீட்டு விழா தஞ்சையில் நடக்க திட்டமிட்டிருந்தனர் ஆனால் ரத்தானது.

சோழர்களின் தலைநகரமான தஞ்சையில் பட புரமோஷன் நிகழ்ச்சிகள் துவங்க இருந்தநிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்கால் அதுவும் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top