பொன்னியின் செல்வம் படத்தின் ஜுவல்லரி பார்டன் வீடியோ ! பாத்தா வாய திறந்திடுவீங்க!

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த படம் பெரும் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் டீசர் சில தினங்களின் முன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற நாவலைத்தழுவி தான் படம் உருவாகிறது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் சிங்கிள் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘பொன்னி நதி’ பாடல் வெளியானது.

இந்நிலையில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியீடு ஐதராபாத்தில் நடைபெறயுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து நடிகர்கள் மற்றும் நடிகைகள் அணிகலன்களை அணிந்து கொள்ளுவது போன்ற புதிய ப்ரோமோ வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு நகைக்கூட்டாளிகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் ஹீரோயின் சம்பளம் மட்டும் இவ்வளவா? அள்ளி கொடுக்கும் படக்குழு!