காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலையே காணவில்லை .. பொன்மாணிக்கவேல் புகாரால் பரபரப்பு!

இதுவரை கோவில் சிலைகள் மட்டுமே காணாமல் போனதாக புகார்கள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது காஞ்சிபுரத்தில் ஒரு கோவிலையே காணவில்லை என முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் அவர்கள் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் என்ற கிராமத்தில் பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கோவில் ஒன்று இருந்தது என்றும் இந்த கோவில் கடந்த 1906ஆம் ஆண்டு வரை இருந்ததாக கல்வெட்டு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்றும் ஆனால் இந்த கோவில் தற்போது காணவில்லை என்றும் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் அவர்கள் புகார் அளித்துள்ளார்.

ponmaicakvel115 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோவிலில் இருந்ததாக ஆவணங்கள் இருக்கும் நிலையில் தற்போது அந்த கோவில் என்ன ஆச்சு என்று விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். சோழர்களால் கட்டப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சார பொக்கிஷமான இந்த கோவில் காணாமல் போனது குறித்து இந்து அறநிலை துறை அமைச்சகம் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற குற்றச்சாட்டையும் அவர் அறிவித்துள்ளார்.

மக்கள் வழிபாட்டில் இருந்த கோவில் திடீரென காணாமல் போனது எப்படி என்று இன்றுவரை தெரியாமல் இருப்பது உண்மையிலேயே வருந்த தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.