
பொழுதுபோக்கு
திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் டீசர்!
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.
தமிழ் மொழியில் படத்திற்கான டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதே போல் இந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிட்டனர்.கன்னட மொழியில் ரக்ஷித் ஷெட்டி பொன்னியின் செல்வன் டீசரை வெளியிட்டார்.
இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளமே பணியாற்றியுள்ளனர்.
அந்த ஹீரோவுக்கு வில்லனாக நடிக்க மறுத்த விஜய்சேதுபதி! அப்செட் ஆன படக்குழு!
