அத்தனை கோடி கொடுத்தும் வலிமை படத்தை ஓடிடிக்கு விற்க மறுத்த போனி கபூர்….!

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெரும்பாலான படங்கள் தியேட்டரை தவிர்த்து ஓடிடியில் தான் வெளியாகி வருகின்றன. ஆனால் தனுஷ் சூர்யா போன்ற நடிகர்களின் படங்கள் தான் அதிகளவில் வெளியானதே தவிர ரஜினி விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அதாவது பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் ஓடிடியில் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்படலாம் என்பதால் பல படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. அந்த வகையில் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாக வேண்டிய அஜித்தின் வலிமை படம் தற்போது தள்ளி சென்றுள்ளது. அதனால் வலிமை படத்தை வாங்க பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு வருகிறதாம்.

அதில் பிரபல ஓடிடி நிறுவனம் ஒன்று சுமார் 300 கோடி ரூபாய்க்கு வலிமை படத்தை வாங்க முயற்சி செய்துள்ளதாம். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தை தர மறுத்து விட்டாராம். வலிமை படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிட வேண்டும் என போனி கபூரிடம் அஜித் கோரிக்கை விடுத்துள்ளாராம்.

மேலும் வலிமை படத்தை ஓடிடியில் வெளியிட்டால் என் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள். அதனால் தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என அஜித் போனி கபூரிடம் விரும்பி கேட்டு கொண்டதால் தான் அவர் இவ்வளவு பெரிய ஆஃபர் வந்தபோதும் அதை மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அது உண்மை தான். ஏனெனில் அஜித்தை பெரிய திரையில் பார்த்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. அதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஏக்கத்தில் உள்ளனர். தற்போது வலிமை படத்தின் வெளியீடு தள்ளி சென்றதே அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.

இந்நிலையில் படமும் ஓடிடியில் வெளியானால் ரசிகர்கள் அவ்வளவு தான். ரசிகர்களுக்காக அஜித் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்துள்ள இந்த செய்தி அவர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment