Connect with us

பொங்கல் வேட்டி, சேலை திட்டம்: டெண்டர் அறிவிப்பு!!

tamilnadu govt

தமிழகம்

பொங்கல் வேட்டி, சேலை திட்டம்: டெண்டர் அறிவிப்பு!!

2023-ம் ஆண்டுக்கான பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்காக பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பாண்டிலும் வேட்டி, சேலை திட்டத்திற்காக பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் படி, 1,683 டன் பருத்தி நூல் வாங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே போல் டெண்டருக்கான கடைசி நாள் செப்டம்பர் ஒன்பதாம் தேதி என குறிப்பிடப்பட்டு உள்ளது. கைத்தறி நெசவாளர்கள் 15 ஆயிரம் பேரும், விசைத்தறியாளர்கள் 54 ஆயிரம் பேரும் இத்தகைய திட்டத்தினால் பயன் அடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top