இந்தியாவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மிக வேகமாக கொரோனா பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

தமிழ்நாட்டில் நடிகர் அருண் விஜய், இயக்குனர் டி.பி கஜேந்திரன் , இந்திய அளவில் கங்குலி குடும்பம், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் போன்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று இருந்த 58097 அளவில் இருந்த கொரோனா அலையின் வேகம் அப்படியே பெரிய அளவில் மாறி அதன் எண்ணிக்கைகள் இன்று ஒரு லட்சத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment