பொங்கலில் கரும்பு வழங்க கோரிய வழக்கு: ஐகோர்ட் புதிய உத்தரவு!!

தமிழகத்தில் வருகின்ற 2023-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரூ.1000 ஆயிரம் ரொக்கம் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசி தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து வினியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகுப்பு டன் கரும்பு இடம் பெற, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

சிக்கலில் TTF வாசன்? பெண் தோழியுடன் பைக் சாகசம்… நெட்டிசன்கள் கேள்வி!

அதில் பொங்கல் தொகுப்பு காரணமாக அரசு நல்ல விலைக்கு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பை பயிரிட்டதாகவும், ஆனால் கரும்பு இடம் பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயம் செளந்தர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விசாரணையை வருகின்ற திங்கள் கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஹிந்தி தெரியாதுனு அவமானப்படுத்துனாங்க.. நடிகர் சித்தார்த் ஆவேசம்!!

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.