பொங்கல் பண்டிக்கைக்காக சிறப்பு ரயில்.. இன்று முன்பதிவு செய்ய தயாராக இருங்க..

பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கும் நிலையில் இந்த சிறப்பு ரயிலின் முன்பதிவு இன்று நடைபெற இருப்பதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. எனவே இன்று காலை சிறப்பு ரயில் முன்பதிவு செய்ய பொதுமக்கள் தயாராகும்படி அறிவுறுத்தப்படுகிறது நின்று கொண்டிருந்த நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்

1. , தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்: தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு நாகர்கோவில் அடையும். அதேபோல் மறுமார்க்கத்தில் ஜனவரி 16 ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து மாலை 05.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

2. தாம்பரம் – திருநெல்வேலி: தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். அதேபோல் திருநெல்வேலியிலிருந்து ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 01.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்

3. தாம்பரம் – திருநெல்வேலி ரயில்: தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில் ஜனவரி 16 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். அதேபோல் மறு மார்க்கத்தில் திருநெல்வேலி – தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

4. தாம்பரம் – திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்- தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் ஜனவரி 17 ஆம் தேதி திருவனந்தபுரம் கொச்சுவேலியில் இருந்து காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இதேபோல் மறுமார்க்கத்தில் ) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.

5. எர்ணாகுளம் – சென்னை சென்ட்ரல்; எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 12 ஆம் தேதி 11.20 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 3.10 மணிக்கு கேரளாவின் எர்ணாகுளம் சென்றடையும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.