தமிழக அரசு பொங்கல் தொகுப்பு கொண்ட பை ஒன்று வழங்கியது. பல இடங்களில் பொங்கல் தொகுப்பு மோசமாக இருக்கிறது வெல்லம் வழிகிறது பொங்குகிறது என பரவலாக குற்றச்சாட்டுகள் வந்து கொண்டே இருந்தது.
இந்நிலையில் திருத்தணியில் பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய நந்தன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனால் மனம் உடைந்த நந்தனின் மகன் தீக்குளித்தார். தன் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த இவர் தீக்குளித்த நிலையில் இன்று இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அது போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது, அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும், தெரிவித்துக்கொள்கிறேன் என எடப்பாடி கூறியுள்ளார்.
பொங்கல் தொகுப்பில் பல்லி இருந்ததாக கூறிய தன் தந்தை திரு.நந்தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற திரு.குப்புசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது,
அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும், வருத்தங்களையும்,
1/2 pic.twitter.com/uvmc85cKvF— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 12, 2022