பொங்கல் தொகுப்பில் மோசடி: 5 நிறுவனங்ககளில் ரூ.290 கோடி கண்டுபிடிப்பு!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பின் போது தரமற்ற மளிகை பொருட்கள் வினியோகம் செய்வதாக வருமான வரித் துறையினருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் ருணாச்சலா இம்பெக்ஸ், பெஸ்ட் டால் மில் உள்ளிட்ட 5 நிறுவனங்களில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 40 இடங்களில் 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

தற்போது பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களில் ரூ. 290 கோடி வருவாய்யை மறைத்துள்ளதை அதிகாரிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

மேலும், போலி ரசீதுகளை தயாரித்து கணக்கு காட்டியதாகவும், பல முக்கிய ஆதாரங்கள் மறைத்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.