Connect with us

அடுத்த பொங்கலுக்கான வேஷ்டி, சேலை திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பு!!

pongal dhuti

தமிழகம்

அடுத்த பொங்கலுக்கான வேஷ்டி, சேலை திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பு!!

ஒவ்வொரு ஆண்டும் நம் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். கடந்த பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி சர்ச்சையான கருத்துக்கள் தற்போது வரையும் பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறு உள்ள நிலையில் அடுத்த ஆண்டுக்கான பொங்கல் வேஷ்டி, சேலை டெண்டர் குறித்து தற்போதைய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பொங்கல் வேஷ்டி, சேலை திட்டத்திற்கு படத்தின் நூல் வாங்க டெண்டர் அறிவித்துள்ளது தமிழக அரசு.

1683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க டெண்டர் அறிவித்துள்ளது. செப்டம்பர் ஒன்பதாம் தேதி தான் கடைசி நாள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1.80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேஷ்டி, சேலை திட்டத்தால் 15,000 கைத்தறி நெசவாளர்கள் 54,000 விசைத்தறி நெசவாளர்கள் பயனடைவர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top