பயங்கர போட்டியாக இருக்கும் போலயே.. பொங்கல் ரீலிஸ்-ல் சூப்பர் ஸ்டாருடன் மோத களமிறங்கும் திரைப்படங்கள்!

கோலிவுட்டில் கடந்த 2023 வருடம் லியோ, ஜெயிலர், வாரிசு, துணிவு, பொன்னியின் செல்வன், ஜிகர்தண்டா டபுள் x, விடுதலை, மாமன்னன், குட்நைட் போன்ற படங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும் படியாக படங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. போதாக்குறைக்கு நடிகர்களின் அடுத்தடுத்த மரணங்களும் 2023 திரையுலகை ஆட்டிப் படைத்தது. ஆனால் 2024-ல் தமிழ் சினிமாவிற்கு நல்ல காலம் பிறக்கப் போகிறது.

இந்த வருடத்தின் துவக்கத்திலேயே பிரம்மாண்ட நடிகர்களின் படங்கள் ரீலீஸ் ஆவதால் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் என நம்பலாம். அந்த வரிசையில் பொங்கலுக்கு 5 படங்கள் மோத தயாராக உள்ளன.

லால் சலாம் 

லால் சலாம் – இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால், ரஜினிகாந்த், நிரோஷா என பல பிரபலங்கள் நடிக்கும் ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ‘லைக்கா’ நிறுவனம் இப்படத்தினை தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

கேப்டன் மில்லர்

பெரிதும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் தனுஷ்-ன் கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஸ், சுந்தீப் கிஷான் என பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கும் அதிரடி – திரில்லர் திரைப்படம். முற்றிலும் ஆக்ஷன் திரைக்கதையில் உருவாகியுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, லைக்கா நிறுவனம் கேப்டன் மில்லர் படத்தினை விநியோகம் செய்யவுள்ளது.

அயலான்

கடந்த பல ஆண்டுகளாக ஷுட்டிங்கில் இருந்து பின்னர் கிராபிக்ஸ் பணிகளுக்காக மேலும் காலம் எடுத்து அயலான் உருவாகியுள்ளது. இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு என பலர் நடித்திருக்கும் ஏலியன் கதை திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அரண்மனை 4

ஏற்கனவே அரண்மனை படத்தின் 3 பாகங்கள் வெளியாகி ஹிட் ஆன நிலையில் தற்போது அரண்மனை 4 வெளியாக உள்ளது. இயக்குனர் சுந்தர் சி தானே நடித்து, இயக்கி தயாரித்துள்ளார். திகில் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது அரண்மனை 4

மெர்ரி கிறிஸ்மஸ்

பான் இந்தியா மொழிகளில் கலக்கி வரும் விஜய் சேதுபதி தற்போது பாலிவுட் கனவுக் கன்னி காத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்த படம் தான் மெர்ரி கிறிஸ்மஸ். இயக்குனர் ஸ்ரீ ராம் ராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் 2024 பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ல் வெளியாகிறது.

மிஷன் சாப்டர் 1

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ஆக்சன் படம் தான் மிஷன் சாப்டர் 1. ஏற்கனவே பாலாவின் வணங்கான் படத்தில் மும்முரமாக நடித்து வரும் அருண்விஜய் கிடைத்த இடைவெளியில் இப்படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவான இப்படம் தற்போது பொங்கல் ரேஸிலும் இணைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.