பொங்கலை ஒட்டி பல படங்கள் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரோனா காரணமாக அதிகமான படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மிகப்பெரிய பட்ஜெட் படமான ஆர் ஆர் ஆர் படமும் , பிரபாஸ் நடித்த ராதே ஸ்யாம் உள்ளிட்ட படங்களும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழில் பெரும்பாலான நபர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் வலிமை.
ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து படத்தின் அப்டேட்டே கிடைக்காமல் இருந்த ரசிகர்கள் தற்போது பொங்கலுக்கு படம் வெளியாக இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தனர்.
தற்போது ஓமிக்ரான் பரவல் காரணமாக 50 சதவீத இருக்கைகளே தியேட்டரில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் வலிமை ரிலீசும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு ஒரே ஒரு ஆறுதலாக சசிக்குமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா என்ற படம் மட்டும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை எஸ்.ஆர் பிரபாகர் இயக்கியுள்ளார் இதற்கு முன் இந்த கூட்டணி சுந்தரபாண்டியன் படத்தில் சேர்ந்த கூட்டணி என்பதால் இப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படம் வரும் ஜனவரி 13ல் வெளியாகிறது.
Family Entertainer #KombuVatchaSingamda selected as Pongal Release in #JaganTheatre ! pic.twitter.com/W3jflgjYwH
— Jagan Theatre (@JaganTheatre) January 9, 2022