பொங்கலுக்கு என்ன என்ன படங்கள் ரிலீஸ் ஆகின்றன ஒரு பார்வை!

பொங்கலுக்கு முக்கிய படமாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அஜீத் நடித்த வலிமை திரைப்படமாகும்.

கொரொனாவால் 50 சதவீத இருக்கைகளே தியேட்டரில் ஒதுக்க அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதால் வலிமை படம் ரிலீஸ் இப்போது வேண்டாம் என ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது போல பல படங்கள் ஜகா வாங்கியுள்ள நிலையில் திடீரென சில படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன.

இதில் சமீபத்தில் 40 கதை கேட்டு தூங்கிவிட்டதாக பேசி மாட்டிக்கொண்ட அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படமும் வருகிறது.

முக்கியமாக சசிக்குமார் நடித்த கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் சதீஷ் நடித்த நாய் சேகர் படமும் இந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றன.

மேலும் கார்பன், மருத, எஜிபி, பாசக்கார பய , தேள் போன்ற படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இதில் பாதி படங்களின் தயாரிப்பாளர்கள் இந்த நேரத்தை பயன்படுத்தி நாம் போட்ட காசையாவது எடுத்துவிட வேண்டும் என்ற நோக்கில்தான் படத்தை வெளியிடுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment