பொங்கல் பரிசு ரூ.5000 – அதிமுக முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!

தமிழர் பண்டிகையான பொங்கல் தினத்தில் ரூ.5000 தமிழக அரசு வழங்க வேண்டும் அதிமுக முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவினில் பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. அதன்படி, நேற்றைய தினத்தில் நெய் விலை உயர்த்திய நிலையில் இன்று வெண்ணை விலையையும் தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திமுக ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டதாக கூறியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சித்தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருக்கும் போது மின் கட்டணம் குறைக்கப்படும் என கூறினார்.

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஒட்டுமொத்தமாகவே மின்கட்டணத்தை உயர்த்தி இருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கடந்த ஆண்டு தரமற்ற பொருட்கள் வழங்கிய மக்களை கவலைக்கு கொண்டுசெல்வதாக கூறியுள்ளார்.

வருகின்ற 2023 -ம் ஆண்டு பொங்கல் தினத்தில் 5000 ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது தன்மானமற்ற கட்சி என தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.