கிஷோர் கே. ஸ்வாமி ஆரம்பத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக மறைந்த முன்னாள் முதல்வருக்கு ஆதரவாக தனது சமூக வலைதளங்களில் கருத்து கூறி வந்தார்.
அவருக்கு ஆதரவாக மட்டுமல்லாமல் தற்போது ஆளும் திமுக அரசு பற்றி அவர்கள் அந்த காலத்தில் செய்த தவறுகள் ஊழல்கள் எல்லாவற்றையும் விமர்சனம் செய்து கொண்டே இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் பிரிவினை குழப்பங்கள் உண்டானது. அந்த நேரத்தில் இவர் பிஜேபி ஆதரவாளராக மாறினார்.
இருந்தாலும் இவர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். திமுகவின் பரம எதிரி கட்சியான அதிமுகவின் முன்னணி தலைவர்கள் கூட திமுகவை இவரளவுக்கு விமர்சித்திருக்க மாட்டார்கள்.
சமீபத்தில் அமைந்த திமுக அரசு தொடர்ந்து இவர் தவறாக எழுதி வருவதை வைத்து பழைய வழக்குகளை தோண்டி எடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்தது. பின்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் இவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் செல்லாது என இவர் வெளிவந்த நிலையில் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறார்.
சமீபத்தில் பொங்கலை ஒட்டி சிறப்பு பொங்கல் பை அறிவிப்பு வந்தது.
இந்த செய்தியை பார்த்த கிஷோர் கொடுக்குறது கடுகு சீரகம் இதுலயே சொத்தையே எழுதி கொடுத்துட்ட மாதிரி என்று சொல்லி பொங்கல் பை அலப்பறைகள் என்று கூறி விமர்சனம் செய்துள்ளார்.