தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்படும் தொழில் எது என்று கேட்டால் அனைவரும் கூறுவது மீன்பிடி தொழில் தான். ஏனென்றால் மீனவர்கள் மழைக்காலம் தொடங்கினால் கடலுக்கு செல்ல முடியாத நிலைமை உருவாகும். ஒருவேளை அவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்தால் எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்க படுவார்கள்.
ஒரு சில நேரங்களில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுவிடுவார்கள். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் அவர்களை விடுவிக்க கோரி தமிழகத்தின் முதல்வர் கடிதம் எழுதி அனுப்புவார்கள்.
அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வெளியுறவு துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க வேண்டும் என்றும் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட 75 படங்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பொங்கலை முன்னிட்டு மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் இணைவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.