தமிழகத்தில் இன்றைய தினம் தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளே தமிழர் களின் உரித்தான பண்டிகை ஆகும். இதனால் வெளியூர் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு விரைந்து திரும்புவர் பொங்கல் திருநாளுக்காக தமிழர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நம் தமிழ் பேசும் மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதன்படி தமிழகத்தின் எழுச்சி மிக்க கலாச்சாரத்தின் அடையாளமாக பொங்கல் திகழ்கிறது என்று பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்தார். சிறப்பு வாய்ந்த நாளில் அனைவருக்கும் குறிப்பாக உலகமெங்கும் தமிழ் மக்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இயற்கையுடனான நமது பிணைப்பு, சமூகத்தின் சகோதரத்துவ உணர்வு இன்னும் ஆழமாக நான் பிரார்த்திக்கிறேன் என்று மோடி கூறியுள்ளார்.