பொங்கல் விடுமுறை – ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் திங்களன்றும் கூடுதலாக ஒரு நாள் அரசு விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை 14, 15, 16 மூன்று நாட்கள் எப்போதும் விமரிசையாக கொண்டாடப்படும்.

இந்த முறை கொரோனா கட்டுப்பாடுகளாலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதாலும் அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுவது வாடிக்கை இந்த முறை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் காணும் பொங்கல் கொண்டாட முடியாத சூழ்நிலையும் உள்ளது.

 

அதன்படி பொங்கலுக்கு சென்றவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு என்பதால் சொந்த ஊர் சென்றவர்கள் வேலைக்கு திரும்ப முடியாது என்பதால் அவர்கள் திங்கட்கிழமை திரும்பும் வண்ணம் வரும் ஜனவரி 17ம் தேதி  திங்கட்கிழமையும் அரசு விடுமுறை என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளியூருக்கு பொங்கலுக்கு வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment