பொங்கலை ஒட்டி வரலாறு காணாத விலை ஏற்றம்!

பொங்கல் பண்டிகையையொட்டி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வு. பிச்சிப்பூ கிலோ 1,500ரூபாய்க்கும், மல்லிகைப்பூ கிலோ 2,500ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பொங்கல் பண்டிகை காரணமாக திண்டுக்கல் பூ சந்தையில் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது. வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக திண்டுக்கல் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பனிப்பொழிவால் உற்பத்தி சரிவடைந்துள்ளதால் பூக்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ 2 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் ஒரு கிலோ கனகாம்பரம் ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் ஒரு கிலோ முல்லைப்பூ ஆயிரத்து 600 ரூபாய்க்கும் காக்கரட்டான் ஆயிரத்து 400 ரூபாய்க்கும் சாதிப்பூ ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகரித்துள்ள போதிலும் பொதுமக்கள் பூக்களை அதிக அளவில் வாங்கிச்செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருமாவளவன் அதிரடி கைது – சென்னையில் பரபரப்பு!

தாமரை பூ ஒன்றின் விலை 25க்கு விற்பனையாகிறது. கன்னியாகுமரியில் பொங்கல் பண்டிகை காரணமாக மல்லி பூ விலை 3000த்துக்கு மேல் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.