பொங்கல் பரிசாக எவ்வளவு பணம்? தலைமை செயலகத்தில் இருந்து கசிந்த தகவல்!

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு உடன் ரொக்கம் கொடுக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு ரொக்கம் கொடுக்கப்பட இருப்பதாகவும் இது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும் வெளியான செய்தியை பார்த்தோம்.

இந்த ஆண்டு பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5,000 ரூபாய் வரை வழங்க வேண்டும் என அதிமுக, பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கமாக வழங்கப்படும் பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் ரொக்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும், இது குறித்து ஆலோசனை நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைச் செயலகத்தில் இருந்து கசிந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த ஆண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 பணத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்னும் ஒரிரு நாளில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.