அட கொடுமையே!! பொங்கல் பரிசு குப்பை வண்டியில் சென்ற அவலம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பொங்கல் பரிசுப்பொருட்களை குப்பை வண்டிகளில் எடுத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

அதே போல் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குடும்ப அட்டைத்தார்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகள் அந்தந்த வட்டாட்சியல் அலுவலகத்தில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்தில் உள்ள நியாய விலை கடைக்கு வேட்டி மற்றும் சேலைகள் குப்பை அல்லும் வண்டியில் பொதுமக்களுக்கு அனுப்பட்டது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில் வேட்டி மற்றும் சேலைகள் அனுப்பியது குப்பை வண்டியா? என்பது தமக்கு தெரியாது என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.