பொங்கல் முடிந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கும்! பரிசுத்தொகுப்பு பெற கடைசி நாள் எப்போது?

தைத்திங்கள் முதல்நாள் தமிழகத்தில் தமிழர் திருநாள் கொண்டாடப்படும். இதற்காக ஒவ்வொரு வருஷமும் தமிழக அரசின் சார்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் பல இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு சேதமடைந்த பொருட்கள் கண்டறியப்படுகின்றன.இந்நிலையில் இது குறித்து தமிழக அரசின் சார்பில் சிலர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த மாதம் இறுதி வரை அதாவது ஜனவரி 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

ஜனவரி ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அறிவிக்கப்படும் வேறு நாட்களில் பொங்கல் பரிசு பெறலாம் என்றும் கூறியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தவறு ஏதேனும் நிகழ்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார். பொங்கல் தொகுப்பு தரும் போது சில நேரங்களில் பொருட்களை விட்டுவிட்டு வருவதாகவும் புகார் வந்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment