தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.
இதற்கிடையில் வருகின்ற 2023 பொங்கல் பண்டிகையில் பரிசு தொகுப்பில் பச்சரிசி, முந்திரி, திராட்சை உள்ளிட்ட 21 வகை மளிகைப்பொருட்கள், வேட்டி, சேலை, பணம் உள்ளிட்டவைகள் அடங்கும்.
ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு… ஒருவர் பலி!!
இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டிலும் மளிகைப்பொருட்களுக்கு பதிலாக ரூ.1000 வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்று வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்: பொதுமக்களின் பேரணி நிறுத்தம்..!!!
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, பெரிய கருப்பன், திமுக நிர்வாகிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.