பொங்கல் பரிசு தொகுப்பு: உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!!

தமிழர்கள் பண்டிகையான தைப்பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தஞ்சை சுவாமி மலையை சேர்ந்து விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

அதில் தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் தை பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொடர்ச்சியாக வழங்கப்படுவதாக தெரிவித்தார். அதன் ஒருபகுதியாக நடப்பாண்டில் 2.26 கோடி மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

செயற்கை நீர்வீழ்ச்சி வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு!!

இதற்காக அரிசி, முந்திரி, வெல்லம் உள்ளிட்ட 20 வகையான பொருட்களை அண்டை மாநிலங்களில் வாங்குவதாகவும், சில சமயங்களில் தரமான பொருட்கள் வழக்குவதில் சிக்கல்கள் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 20 வகையான பொருட்களை தமிழக விவசாயிகளிடன் இருந்து வாங்கினால் பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லையென மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த சூழலில் பொங்கல் பரிசு பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இன்று முதல்! சில்லறை பண பரிவர்த்தனை.. 4 நகரங்களில் அறிமுகம்!!

இந்த வழக்கின் விசாரணை அமர்வு இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதி மனுதாரரின் வழக்கானது நியாயமானது என்றும் அரசு இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.