பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் டோக்கன்கள் வினியோகம்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு செங்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

சென்னையில் பொங்கல் பரிசு திட்டத்தினை மு.க.ஸ்டாலின் ஜனவரி 9-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் இன்று முதல் வருகின்ற 8-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள 33 ஆயிரம் நியாயவிலை கடை ஊழியர்கள் மூலம் பயனாளர்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளன.

அதிகாலையில் பயங்கர தீ விபத்து: தனியார் வங்கியின் ஏ.சி, கணினிகள் எரிந்து சேதம்!

இதனிடையே டோக்கனில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரம், பெருபவரின் வீட்டு எண், தெரு வரிசை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிகிறது. இந்த சூழலில் பயனாளர்கள் ரேஷன் கடைக்கு வரும் போது ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை கொண்டு வந்து கைரேகை வைத்து பொங்கல் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் நேரில் வர இயலாதோர், மாற்றுதிறனாளிகள் அதற்கான படிவத்தில் ரேஷன் கடைகளை குறிப்பிட்டு அந்தந்த ரேஷன் கடை ஊழியர்களிடன் வழங்கினால் அதற்கான பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலர்ட்! அடுத்த 3 மணி இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை தகவல்..!!

இத்தனைய திட்டத்தின் மூலம் சுமார் 2.19 கோடி குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பத்தினர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.