பொங்கல் பரிசு தொகுப்பு: முதல் நாளே இந்த பிரச்சனையா?

பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு வினியோட திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தொடக்கி வைத்தார்,ஜனவரி 9 முதல் 13 வரை இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளனர்.

குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசு பெறாதவர்கள் ஜனவரி 15 பொங்கலுக்கு அடுத்து ஜனவரி 16 வது நாள் பெற்று கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சங்கர பாணி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடங்கிய முதல் நாளே சர்வர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி முடங்கியுள்ளது. தேனி , சிவகங்கை , திருச்சி ,கோவை ,திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சர்வர் பிரச்சனை காரணமாக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சாதாரண முறையில் அவரது ரேஷன்கார்டு எண்ணை குறித்துக் கொண்டு பொங்கல் தொகுப்பை வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

12 வயது சிறுவன் மரணமா? அதுவும் மாரடைப்பா….. அதிர்ச்சி தகவல்!

இந்த முறையில் கைரேகையும் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி , சர்க்கரை , ஒரு முழு கரும்பு இதனுடன் ரொக்க பணம் 1000ம் வழங்க உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.