பொங்கல் பரிசு; ரூ.1000 வழங்க முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 2-ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார்.

தமிழர்கள் பண்டிகையான தை பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் இலவச வேட்டி, சேலை, முந்திரி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

பெற்ற குழந்தையை கொன்ற சிறுமி: திருப்பூரில் பரபரப்பு..!!

அந்த வகையில் கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் 21 மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது. இருப்பினும் தரமற்ற பொருட்கள் வழங்கியதாக அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் நடப்பாண்டில் மளிகை பொருட்களுக்கு பதிலாக ரூ.1000 வழங்க வேண்டும் என அனைத்து கட்சி தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதற்காக சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

வாத்து பண்ணையில் 5 சிறுமிகளுக்கு வன்கொடுமை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

இந்த சூழலில் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்க வேண்டும் என உத்தரவை பிறப்பித்துள்ளார். அதோடு ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி முதல் வழங்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.