பொங்கலை ஒட்டி வரும் நாட்களில் கடும் மழை வாய்ப்பு- வானிலை ஆராய்ச்சி மையம்

கடந்த வருடத்திலும் சரி இந்த வருடத்திலும் சரி கடுமையான மழை பெய்துள்ளது. எந்த வருடங்களும் இல்லாத அளவு மழை இந்த இரண்டு வருடத்தில் பெய்துள்ளதால் நீர் நிலைகள் உயர்ந்துள்ளன.

இந்த நிலையில் கடந்த வாரம் சென்னையில் கடும் மழை பெய்தது இரண்டு நாட்கள் கடுமையாக பெய்த மழையில் சென்னை நகரம் மீண்டும் வெள்ளக்காடானது.

ஆனால் இன்னும் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அவ்வப்போது அறிவித்து வருகிறது.

வரும் ஜனவரி 13ல் பொங்கலை ஒட்டி தொடர் மழை பெய்ய இருக்கிறது.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழை வரை பெய்யக்கூடும் என தெரிகிறது.

இந்த நாட்களில் மீனவர்கள் 3 நாட்களுக்கு தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment