பொங்கல் பண்டிகை! 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகை கொண்டாடுவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

தீண்டாமை விவகாரம்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!

அந்த வகையில் நடப்பாண்டின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்தும் மற்ற பிற மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தற்போது வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சென்னையில் இருந்து 10,749 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துறை கழகம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் 4,440 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. புலம்பும் TTF வாசன்!

மேலும், பிற ஊர்களில் இருந்து இந்த 3 நாட்களுக்கு 6183 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.